Posts

Showing posts from April, 2019

என் காதல்

நீ வேண்டும்  என்பதற்காக எதையும் இழக்க  என்னால் முடியும் ! உன்னை இழப்பதாயின் எதையுமே வேண்ட மாட்டேன் இறைவனிடம்!! 

சந்திப்பு

உன்னைக் காணும் வரை தேடலும் கண்டபின் ஊடலும் இயல்பாகிப் போனது. எப்போதும் நீயோ எப்போதாவது நானோ எதிர்மறையாவது நடைமுறையானது. சச்சரவு இன்றி சந்திப்பு முடிந்ததாய் ஞாபகமில்லை எனக்கு. ஆனாலும் அடுத்த  சந்திப்புக்கு காத்திருப்பதே வழக்கமாய்ப் போனது.

காதல்

களவு போலக் காதலையும் கற்று மறப்பதாயின் மடிந்து போ. காதல் வாழட்டும், மாறாக நீ வாழ்ந்து காதலை வேசியாக்கி விடாதே.