சந்திப்பு
உன்னைக்
காணும் வரை
தேடலும்
கண்டபின் ஊடலும்
இயல்பாகிப் போனது.
எப்போதும் நீயோ
எப்போதாவது நானோ
எதிர்மறையாவது
நடைமுறையானது.
சச்சரவு இன்றி
சந்திப்பு முடிந்ததாய்
ஞாபகமில்லை
எனக்கு.
ஆனாலும் அடுத்த
சந்திப்புக்கு
காத்திருப்பதே
வழக்கமாய்ப் போனது.
காணும் வரை
தேடலும்
கண்டபின் ஊடலும்
இயல்பாகிப் போனது.
எப்போதும் நீயோ
எப்போதாவது நானோ
எதிர்மறையாவது
நடைமுறையானது.
சச்சரவு இன்றி
சந்திப்பு முடிந்ததாய்
ஞாபகமில்லை
எனக்கு.
ஆனாலும் அடுத்த
சந்திப்புக்கு
காத்திருப்பதே
வழக்கமாய்ப் போனது.
Comments
Post a Comment